செய்யாறு அருகே ஒரே நாளில் அடுத்தடுத்து 5 கோயில்களில் அம்மன் தாலிகள், உண்டியல் பணம் திருட்டு:
செய்யாறு அருகே தூசி கிராமத்தில் அடுத்தடுத்து 5 கோயில்களின் பூட்டுகளை உடைத்த மர்ம ஆசாமிகள் அங்கிருந்த அம்மன் தாலிகள் மற்றும் உண்டியல் பணத்தை திருடிச்சென்றுள்னர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த தூசி கிராமத்தில் அபிமூர்த்தி ஈஸ்வரன், செங்கையம்மன், கெங்கையம்மன், மாரியம்மன், அங்காளம்மன் ஆகிய கோயில்கள் உள்ளன. இந்த கோயில்கள் அனைத்தும் அருகருகே அமைந்துள்ளன. இங்கு சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்தவர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். அதன்படி, செவ்வாய்க்கிழமையான நேற்று முன்தினம் கோயில்களில் பூஜைகள் முடிந்த பின்னர் பூசாரிகள் பூட்டிவிட்டு சென்றனர்.
