ஜெய் ஸ்ரீ ராம் என்றாலும் ஏற்றுக் கொள்வோம், அரோகரா என்றாலும் ஏற்றுக்கொள்வோம் :
“ஜெய் ஸ்ரீ ராம் என்றாலும் ஏற்றுக் கொள்வோம், அரோகரா என்றாலும் ஏற்றுக்கொள்வோம்” என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, “பழனி ஆண்டவர் கலைக் கல்லூரியில் ஆசு.24,25ல் அனைத்துலக முருகன் மாநாடு நடைபெறவுள்ளது. முருகன் மாநாட்டிற்காக தமிழக அரசின் பல்வேறு துறைகள் ஜார்பில் ரூ.6 கோடி வழங்கப்படவுள்ளது. முருகன் மாநாட்டிற்காக ஒவ்வொரு ஷிப்டிலும் 1,200 காவலர்கள் பணியில் ஈடுபடவுள்ளனர். மாநாடு நடைபெறும் இடத்தில் பக்தர்களுக்காக இலவச பேருந்து வசதி, கழிவறை வசதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து பலர் வரவுள்ளனர்.
