சென்னையில் 3 தளங்களுடன் 115 அடி ஆழத்தில் அமைய உள்ள மயிலாப்பூர் மெட்ரோ ரயில் நிலையத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் வெளியீடு
சென்னையில் 3 தளங்களுடன் 115 அடி ஆழத்தில் அமைய உள்ள மயிலாப்பூர் மெட்ரோ ரயில் நிலையத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் காண்போரை ஆச்சரிய அடைய வைத்துள்ளது. சென்னையில் 63,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 116 கிமீ தொலைவுக்கு 2ம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுகின்றன. அனைத்து பகுதிகளிலும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், மயிலாப்பூரில் கட்டப்படும் மெட்ரோ நிலையம், மற்ற நிலையங்களை காட்டிலும் ஆழமாகவும் பரந்த பொது தளத்தோடும் உருவாகி வருகிறது. பொது தளம், வணிக வளாகம், மேல் நடைமேடை, கீழ் நடைமேடை என 4 நிலைகளுடன் தரைக்கு கீழே 115 அடி ஆழத்தில் இந்த நிலையம் அமைய உள்ளது.
