கனமழை, கட்டுப்பாடுகள் எதிரொலியால் சுற்றுலாப்பயணிகள் வருகை குறைவு:
கனமழை, கட்டுப்பாடுகள் எதிரொலியாக கேரளாவுக்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. தமிழக – கேரள எல்லையில் தேனி மாவட்டம், கம்பம் உள்ளதால், கம்பம் அருகே உள்ள சுருளி அருவி மற்றும் மேகமலை ஆகிய சுற்றுலாத்தலங்களுக்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகள், அப்படியே கேரள எல்லையான குமுளி, தேக்கடி, வாகமண் மற்றும் ராமக்கல்மேடு ஆகிய சுற்றுலாத்தலங்களையும் கண்டுகளித்து செல்கின்றனர். தற்போது இடுக்கி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை குறைந்த நிலையில் சுற்றுலாப்பயணிகளின் வருகையும் வெகுவாக குறைய தொடங்கியுள்ளது.
