திருப்பத்தூரில் ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் பிரம்மக்கமலம் பூத்து குலுங்கியது:
திருப்பத்தூரில், ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் பிரம்மக்கமலம் பூ ஒருவரது வீட்டில் பூத்து குலுங்கியது. திருப்பத்தூர் நகராட்சியில் உள்ள பூங்காவனத்தம்மன் கோயில் தெருவில் வசிப்பவர் அன்பு. இவரது வீட்டில் வெற்றிலை உட்பட பல்வேறு வகையான செடிகளை வளர்த்து வருகிறார். அதேபோல், பிரம்மக்கமலம் என்ற பூச்செடியையும் வளர்த்து வருகிறார். இந்த பூவானது ஆண்டுக்கு ஒருமுறை ஆடி மாதத்தில் இரவில் பூக்கும் தன்மையுடையது.
