தனுஷ் தற்போது தன் ஐம்பதாவது திரைப்படமான ராயன் பட வேலைகளில் பிசியாக இருந்து வருகின்றார். இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்க தனுஷின் மூத்த மகனான யாத்ரா இப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வருகின்றன
தனுஷின் நடிப்பில் சமீபத்தில் கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியானது. அருண் மாதீஸ்வரனின் இயக்கத்தில் உருவான இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்தது. ஆனால் இப்படம் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றுதான் சொல்லவேண்டும். என்னதான் கேப்டன் மில்லர் திரைப்படம் தனுஷ் ரசிகர்களை திருப்திபடுத்தினாலும் பொதுவான ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை தான் பெற்றது.
இருப்பினும் வசூலை பொறுத்தவரை கேப்டன் மில்லர் ஒரு வெற்றிப்படமாகவே அமைந்தது. இதைத்தொடர்ந்து தனுஷ் தற்போது ராயன், D51 என இரு படங்களில் நடித்து வருகின்றார். இதில் அவரது ஐம்பதாவது திரைப்படமான ராயன் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
