இலங்கையில் வசித்துவரும் இவரை பெட்டா எம்.ஜி.ஆர். என்று மக்கள் அழைக்கிறார்கள். சமூக ஊடகங்களில் இவரது வீடியோக்கள் வைரல். கனடா, ஜப்பான், மலேசியா, உகாண்டா, ஆஸ்திரேலியா, நார்வே, பாரிஸ் என பல நாடுகளில் உள்ள தமிழர்கள் இவரை அறிவார்கள். தன்னைப் பற்றி பெட்டா எம்.ஜி.ஆர். பேசும் போது, “நாளை நமது நாடும் நமது என்று வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர். அவர் எங்கள் கண்டியில் பிறந்தவர். அதில் எனக்குப் பெருமை. என் உண்மையான பெயர் மாணிக்கம். உலக அளவில் என்னை பெட்டா எம்.ஜி.ஆர். என்பார்கள். எங்கள் ஊரில் என்னை மாணிக் பாட்சா என்பார்கள். நான் தனி ஆள். கூட யாரும் இல்லை. இருக்கும் வரை சந்தோஷமாக வாழவேண்டும். அதைத்தான் தலைவர் சொன்னார். ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் பீச் பக்கம் சந்தோசமாகப் பொழுதைக் கழிக்க வருவேன்” என்கிறார்.
