சென்னையில் இருந்து காணொளி காடசி மூலம் மதுரையில் ஒலிம்பிக் அகாடமி கட்டடத்திற்கு துணை முதல்வர் அடிக்கல் நாட்டினார். சென்னையில் 553 மாணவர்களுக்கு சாம்பியன்ஸ் கிட் வழங்கினார். ராணிப்பேட்டையில் விளையாட்டு மைய வளாகம் கட்டும் பணியை தொடங்கி வைத்தார்.
பின்பு அவர் பேசியதாவது தமிழ்நாட்டில் இருந்து தலைசிறந்த விளையாட்டு வீரர், விராங்கனைகளை உருவாக்குவோம். சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் இதுவரை 600-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகளுக்கு நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு திராவிட மாடல் அரசு உரிய முக்கியத்துவம் அளித்து வருகிறது.
