சென்னையில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.
சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக தனியார் மின் உற்பத்தி நிறுவன இடங்களில் அமலாக்கத்துறை சோதனை. சைதாப்பேட்டை, தேனாம்பேட்டையில் உள்ள ஓபிஜி பவர் அண்ட் இன்ப்ரா மின் உற்பத்தி நிறுவன இடங்களில் சோதனை. ஆர்.ஏ.புரம், கீழ்பாக்கம், ஆழ்வார்பேட்டையில் உள்ள சோலார் பேனல் தயாரிக்கும் சேட் நிறுவன இடங்களில் சோதனை. ஆந்திர எல்லையான தடா மற்றும் செங்கல்பட்டில் உள்ள இடங்களிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.
