மகாவிஷ்ணு விவகாரத்தில் நாளை மறுநாள் அறிக்கை தாக்கல் செய்யப்படும்:
மகாவிஷ்ணு விவகாரத்தில் நாளை மறுநாள் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் தகவல் தெரிவித்துள்ளார். சென்னை அசோக்நகர், சைதாப்பேட்டை பள்ளி மாணவர்களுக்கிடையே மூட நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக கல்வி சாராமல் சர்ச்சைக்குரிய சொற்பொழிவு நிகழ்த்தப்பட்ட விவகாரத்தில் சொற்பொழிவாற்றிய மகாவிஷ்ணு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
