அதிமுக மூத்த தலைவர் செஞ்சி ராமச்சந்திரன் விஜய்யின் தவெகவில் இணையவுள்ளதாக வெளியான தகவலுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்,”செஞ்சி ராமச்சந்திரன் தவெகவில் இணைவதாக வதந்தி பரப்புகின்றனர்.அதிமுக என்பது கடல் போன்றது; வலிமையான இயக்கம். அரசு மருத்துவமனைகளில் பல குறைகள் உள்ளதாக மக்கள் என்னிடம் தெரிவித்தனர். ஆரம்ப சுகாதார நிலையங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்.
