கூடலூரில் சேற்றில் சிக்கி காட்டு யானை பரிதாபமாக உயிரிழந்தது. நீலகிரி மாவட்டம் கூடலூர் வட்டம் மதுரை ஊராட்சிக்கு உட்பட்ட வடவயல் கிராமத்தில் சந்தோஷ் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்திற்கு நேற்று சுமார் 13 வயதான ஆண் காட்டு யானை ஒன்று வந்தது. அப்போது, அங்குள்ள சேற்றில் சிக்கி உயிரிழந்தது. இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து அங்கு வந்த வனத்துறையினர் யானை இறந்ததற்கான காரணம் குறித்து ஆய்வு செய்தனர். விவசாய நிலத்தில் இருந்த வாழை மரங்களை சாப்பிடுவதற்காக வந்த யானையின் முன்னங் கால்கள் இரண்டும் சேற்றில் ஆழமாக சிக்கியதால் சேற்றில் இருந்து வெளியேற முடியாமல் யானை உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
