குளித்தலை காவிரி ஆற்றில் மணல் திட்டுகள்; புதைகுழிகள் இருப்பதால் பாதுகாப்பாக குளிக்க வேண்டும்: ெபாதுமக்களுக்கு வேண்டுகோள்
குளித்தலை காவிரி ஆற்றில் மணல் திட்டுகள் புதைகுழிகள் அதிகம் இருப்பதால் பாதுகாப்பாக குளிக்க வேண்டும் என்று ெபாதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மேட்டூர் அணையில் ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு போதிய மழை இல்லாததால் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க முடியாத சூழ்நிலை இருந்து வந்தது. இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்தனர். தற்போது மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடி தாண்டி உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இரு தினங்களுக்கு முன் குறைந்த அளவே உபரி நீர் திறக்கப்பட்டு தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. தொடர்ந்து மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால் கூடுதல் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டதால் காவிரி ஆறு கரை புரண்டு ஓடுகிறது.
