பருவமழையால் விளைச்சல் அதிகம்; கிராமங்களில் அரசாணிக்காய் அறுவடை பணி துவக்கம்; ஓணம் பண்டிகைக்காக கேரளா அனுப்பப்படுகிறது
பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்களில் அரசாணிக்காய் அறுவடை துவங்கிய நிலையில், பெரும்பாலும் கேரளாவுக்கே அனுப்பப்படுகிறது. பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்களில் தென்னைக்கு அடுத்தப்படியாக மானாவாரி பயிர் மற்றும் காய்கறி சாகுபடி அதிகளவில் உள்ளது.இதில் வடக்கிபாளையம்,நெகமம்,கோமங்கலம்,கோட்டூர்,சமத்தூர்,ராமபட்டினம்,கோபாலபுரம்,சூலக்கல், கோவில்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம பகுதிகளில் பூசணி மற்றும் அரசாணிக்காய் சாகுபடியில் விவசாயிகள் அதிகம் ஆர்வம் கட்டுகின்றனர். பருவமழை மற்றும் கோடை மழையை எதிர்நோக்கி சாகுபடி செய்யப்படும் அரசாணிக்காய் குறிப்பிட்ட நாட்களில் அறுவடை செய்யப்பட்டு மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.
