பாம்பன் மீனவர் தூண்டிலில் மெகா சைஸ் மயில் மீன் சிக்கியது:
பாம்பன் நாட்டுப்படகு மீனவர் தூண்டிலில் மெகா சைஸ் மயில் மீன் சிக்கியது. கடல்வாழ் உயிரினங்களில் மிக வேகமாக நீந்தக் கூடியது தளப்பத்து எனும் மயில் மீன் ஆகும். இது மணிக்கு சராசரியாக 100 கி.மீ முதல் 110 கி.மீ வரையிலும் நீந்த கூடியது. முதுகு பகுதி விரித்த மயிற்தோகைப் போன்ற அமைப்பு கொண்டிருப்பதால் இதனை மீனவர்கள் மயில் மீன் என்று அழைக்கின்றனர். இதன் வாய் கூர்மையாக இருப்பதால் குத்தி சேதப்படுத்தும் தன்மை கொண்டது. ஆழ்கடலில் வெதுவெதுப்பான இடத்தில் காணப்படும் இந்த மீன் பெரும்பாலும் பாக்ஜலசந்தி கடலில் அதிகம் உள்ளது.
