வார இறுதி நாட்களை முன்னிட்டு நாளை, நாளை மறுதினம் 1,465 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்து துறை தகவல்
சென்னை: முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு நாளை, நாளை மறுநாள் 1,465 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் வெளியிட்ட அறிக்கை:
ஜூன் 7ம் தேதி (வெள்ளிக் கிழமை), ஜூன் 8ம் தேதி (சனிக்கிழமை) மற்றும் ஜூன் 9ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முகூர்த்தம், வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
