கோவையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் எஸ்.பி.வேலுமணி உதிர்த்தவை!
🍂 அதிகமாக பேசியதே அண்ணாமலைதான்
🍂 அதிமுக – பாஜக கூட்டணி முறிவுக்கு அண்ணாமலைதான் காரணம்
🍂 அண்ணா, ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி குறித்து குறைகூறி பேசியவர் அண்ணாமலை
🍂 கூட்டணியில் இருக்கும்போது கூட்டணி தர்மத்தை அதிமுக கடைபிடிக்கும். விலகினால் அவ்வளவுதான்
🍂 அதிமுக மீதான விமர்சனங்களை தவிர்த்துவிட்டு அண்ணாமலை தனது தலைவர் பதவியை கவனிக்க வேண்டும்
🍂 கடந்த தேர்தலைவிட அதிமுக கூடுதல் வாக்குகளை பெற்றுள்ளது
🍂 சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிட்டபோது பெற்ற வாக்குகளைவிட அண்ணாமலை தற்போது குறைந்த வாக்குகளையே பெற்றுள்ளார்
🍂 பாஜக கூட்டணியைவிட அதிமுக கூட்டணி அதிக வாக்குகளை பெற்றுள்ளது
🍂 2026 சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை அதிமுக பெறும்
