மயிலாடுதுறை: நகரின் மையப்பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தையை பிடிக்க வனத்துறை தீவிரம் காட்டி வருகின்றனர். வலைகளை எடுத்து கொண்டு செம்மங்குளம் பகுதியில் தெரு தெருவாக வனத்துறையினர் தேடினர். வனத்துறையினருடன் இணைந்து தீயணைப்புத்துறை அலுவலர்களும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்வு நடைபெறும் 4 பள்ளிகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் மற்றும் வனத்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது
