மாமல்லபுரத்தில் கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி 5 மாணவர்கள் பலியானார்கள். ஆந்திராவை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் சுற்றுலா வந்தபோது இந்த சோக சம்பவம் நடந்துள்ளது. ஆந்திராவில் உள்ள 2 அரசு கல்லூரிகளை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் சுற்றுலா செல்ல முடிவு செய்தனர்.
மாணவர்கள் 2 குழுவாக பிரிந்து அங்குள்ள புராதன சின்னங்களை சுற்றி பார்த்தனர். 2 குழுவில் ஒரு குழுவை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட மாணவர்கள், புராதன சின்னங்களை பார்த்து விட்டு காலை 10 மணியளவில் மாமல்லபுரம் கடற்கரைக்கு ஜாலியாக நடந்து சென்றனர் அப்போது திடீரென ராட்சத அலை எழும்பியது. அடுத்த சில நிமிடங்களில் 10 மாணவர்களையும் கடல் அலை இழுத்து சென்றது. அனைவரும் அலறி துடித்தனர்
தகவலறிந்து மாமல்லபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மேலும் மாமல்லபுரம் மீனவர் குப்பத்தை சேர்ந்த மீனவர்களும் விரைந்து வந்து படகுகளில் மாணவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்
