தேர்தல் அறிவிப்பு வெளியாகும் நிலையில் பீகார் முதல்வர் லண்டன் பயணம்
லோக்சபா தேர்தல் அறிவிப்பு வெளியாகும் நிலையில் பீகார் முதல்வர் லண்டன் பயணம் ெசல்கிறார். எதிர்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியில் இருந்து விலகி பாஜக கூட்டணியில் இணைந்த பீகார் முதல்வர் நிதிஷ் குமார், கடந்த சில தினங்களுக்கு முன் தனது பாஸ்போர்ட்டை புதுப்பிப்பதற்கான பாட்னாவில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு வந்தார். நிதிஷ்குமாருடன் அவரது நெருங்கிய உதவியாளர் சஞ்சய் ஜா, முதல்வரின் முதன்மை செயலாளர் தீபக் குமார் உள்ளிட்டோர் வந்தனர்.லோக்சபா தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் நிதிஷ் குமார் இங்கிலாந்து செல்வது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
