சென்னை திருவான்மியூரில் நவீன் என்பவர் வீடு உள்பட 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தனியார் கட்டுமான நிறுவன அதிபரான நவீன் வீட்டில் துணை ராணுவத்தின் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டுள்ளனர். சென்னை கோட்டூர்புரம், அண்ணாநகர், தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
