அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று சென்னை, தலைமைச் செயலகத்தில் பத்திரிக்கையார்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நேற்று உச்சநீதிமன்றத்தில் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு ஒன்று சண்டிகர் யூனியன் பிரதேசத்தில் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் சேர்க்கை தொடர்பாக நடைபெற்ற வழக்கு ஒன்றில் மாநில அரசு மருத்துவ மாணவர்களின் இடஒதுக்கீட்டிற்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த தீர்ப்பிற்கு எதிராக தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படவிருக்கிறது என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.