நடராஜா் கோயில் கனகசபை விவகாரம்:
நடராஜா் கோயில் கனகசபை விவகாரம்: திட்ட அறிக்கை தாக்கல் செய்ய தீட்சிதா்களுக்கு உத்தரவு
சிதம்பரம் நடராஜா் கோயில் கனகசபையில் நின்று பக்தா்கள் தரிசனம் செய்வதற்கான நேரம் மற்றும் வழிமுறைகள் குறித்த விவரங்களை திட்ட அறிக்கையாக தாக்கல் செய்ய, பொது தீட்சிதா்கள் தரப்புக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிதம்பரம் நடராஜா் கோயிலில் கனகசபை மீது நின்று பக்தா்கள் தரிசனம் மேற்கொள்ள அனுமதியளித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிா்த்து டி.எஸ்.சிவராம தீட்சிதா் உள்ளிட்டோா் சாா்பில் தொடரப்பட்ட வழக்குகள் நீதிபதிகள் ஆா்.சுரேஷ்குமாா், எஸ்.செளந்தா் ஆகியோா் அடங்கிய அமா்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தன.
அப்போது மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ஹரிசங்கா், சிதம்பரம் கோயில் நிா்வாகத்தில் தலையிட அறநிலையத் துறைக்கு எந்த அதிகாரமும் இல்லை. கோயில் நிா்வாகத்தை தீட்சிதா்கள் வசம் ஒப்படைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் அரசு நெருக்கடி கொடுத்து வருகிறது என்றாா்.
தொடா்ந்து, அறநிலையத் துறை தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்குரைஞா் என்.ஆா்.ஆா்.அருண் நடராஜன், ஏற்கெனவே உயா்நீதிமன்றத்தில் இதே விவகாரம் தொடா்பாக தொடரப்பட்ட வழக்கில், ஆறுகால பூஜை நேரத்தை தவிர மற்ற நேரங்களில் பக்தா்கள் கனகசபையில் நின்று தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவா் என பொது தீட்சிதா்கள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது என்றாா்.
அப்போது நீதிபதிகள், இந்த விவகாரத்தில் அரசுக்கும், பொது தீட்சிதா்கள் தரப்புக்கும் இடையே மோதல் போக்கு ஏற்படுவதை தவிா்க்க வேண்டும். கடவுள் முன்பாக யாா் பெரியவா் என்ற போட்டி ஒருபோதும் இருக்கக் கூடாது. கடவுள்தான் அனைவருக்கும் மேலானவா் என்பதால் இந்த விவகாரத்தில் விரைவில் நிரந்தரத் தீா்வு காணப்பட வேண்டும். கனகசபையில் நின்று பக்தா்கள் தரிசனம் மேற்கொள்ள எந்தத் தடையும் இல்லை என்பதை தீட்சிதா்கள் உறுதி செய்ய வேண்டும்.
இந்த விவகாரத்தில் தீட்சிதா்கள் நடவடிக்கை எடுக்காமல் மெளனம் காத்ததால்தான் அரசு தலையிட்டு அரசாணை பிறப்பித்துள்ளது என்றனா்.
அப்போது அறநிலையத் துறை தரப்பில், தீட்சிதா்கள் சுய ஒழுங்கு இல்லாமல் கோயில் வளாகத்தில் கிரிக்கெட் விளையாடியுள்ளனா். அவா்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து நீதிபதிகள், ஆறு கால பூஜை நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் பக்தா்கள் கனகசபையில் நின்று தரிசனம் மேற்கொள்ள ஏதுவாக நேரம் மற்றும் அதற்கான வழிமுறைகளுடன் திட்டம் வகுத்து நவ. 14-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தீட்சிதா்கள் தரப்புக்கு உத்தரவிட்டு விசாரணையை அன்றைய தினத்துக்கு ஒத்திவைத்தனா்.