தீபாவளி பண்டிகை முடிந்து வெளியூர் பயணம் பஸ் நிலையத்தில் அலைமோதிய கூட்டம்

தீபாவளி பண்டிகை முடிந்து வெளியூர் செல்ல திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது.தீபாவளி பண்டிகை வழக்கத்தை விட இந்த ஆண்டு கூடுதல் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகைக்கு இந்த ஆண்டு தொடர்ந்து 4 நாட்கள் அரசு விடுமுறை அமைந்தது. அதோடு, தீபாவளிக்கு முந்தைய நாள் பள்ளிகளுக்கு கூடுதலாக அரை நாள் விடுமுறையும் அறிவிக்கப்பட்டது. அதனால், குடும்பத்துடன் வெளியூர்களில் இருந்து சொந்த ஊருக்கு சென்று தீபாவளியை கொண்டாடுவோருக்கு வசதியாக அமைந்தது.

Leave a Reply

Your email address will not be published.