பிரபல எழுத்தாளர் மணவை பொன்.மாணிக்கத்திற்கு தமிழ்மலர் மின்னிதழ் பாராட்டு விழா!

தமிழ்மலர் மின்னிதழ் சர்வதேச பத்திரிகையாளர்கள் சார்பில், தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்ற மணவை பொன்.மாணிக்கம் அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

தமிழக அரசின் உயரிய விருதான கலைமாமணி விருதை, ‘எட்டாவது வள்ளல் எம்.ஜி.ஆர்.’ மற்றும் ‘புகழ்மணச்செம்மல் எம்.ஜி.ஆர்.’ காவியங்கள் படைத்தவரும், பிரபல பத்திரிகையாளருமான மணவை பொன்.மாணிக்கம் அவர்களுக்கு தமிழ்மலர் மின்னிதழ் சர்வதேச பத்திரிகையாளர்கள் சார்பாக சென்னை வடபழனியில் உள்ள கே.கே.மினி ஹாலில்,
பாராட்டு விழா நடைபெற்றது. இப்பாராட்டு விழாவில் மணவை பொன்.மாணிக்கம் அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சர்வதேச பத்திரிகையாளர்கள் சார்பாக சென்னையில் உள்ள பத்திரிகையாளர்கள் பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்மலர் மின்னிதழ் ஆசிரியர் மற்றும் நிறுவனர் சிரஞ்சீவி அனிஸ் தலைமை தாங்கினார். இணை ஆசிரியர் எஸ்.செந்தில்நாதன், பொறுப்பாசிரியர் கதிரவன், சிறப்பாசிரியர் ஆலிவர் டெனிஸ்டன், செய்தி ஆசிரியர்கள் கே.என்.அப்துல்சமது,
எஸ்.முஹம்மது ரவூப்,
ஏ.சமது, எஸ்.சுரேஷ், கார்த்திகேயன் மற்றும் செய்தியாளர்கள் மருதாச்சலம்,இபுராஹிம்,
தமிம் அன்சாரி,அப்துல் ரசாக்,அஸ்லம்பாஷா,ஆரிப்
அப்துல் ரஹ்மான்,
சக்ரபாணி,வெங்கடேசன் முத்து குமரன் ,
ரமேஸ், சந்திரன்,கோபி,சரவணன்,
பாலமுருகன்,ஶ்ரீ ஆதித்யா,
மனோஜ் குமார்,முகிலன்,
பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இந்த நிகழச்சி நிகழ்வில் மணவை பொன்.மாணிக்கம் கரங்களால், பத்திரிகையாளர்களுக்கு புதிய அடையாள அட்டையும், தீபாவளி சிறப்பு பரிசும் வழங்கப்பட்டது.

K.N.அப்துல் சமது
செய்தி ஆசிரியர்
தமிழ்மலர் மின்னிதழ்.

Leave a Reply

Your email address will not be published.