உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த, உயர்திரு. மெகர் சந்த் மகாஜன் என்பவர், ‘டார்ஜிலிங்’- என்ற இடத்திற்கு அரசு வாகனத்தில் செல்லாமல், தனது சொந்தக் காரில் குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ளார்.

🔅அங்கே அவர் ஓட்டிச் சென்ற கார், அங்கிருந்த போக்குவரத்து சிக்னலைக் முற்றிலும் கவனிக்காமல், விதியை மீறி சென்றுவிட்டார்.

🔅 அப்போது, போக்குவரத்து காவல் ஆய்வாளர் அவரை இடையில் வழிமறித்து, அவருடைய தவறை சுட்டிக்காட்டுகின்றார்.

🔅 தன்னுடைய தவறை உணர்ந்த உச்சநீதிமன்ற தலைமைநீதிபதி, போக்குவரத்து காவல் ஆய்வாளரிடம் மன்னிப்புக் கோருகின்றார்.

👉 ஆனால், போக்குவரத்து காவல் ஆய்வாளரோ…, அதனை ஏற்க மறுத்து அபராதத்தொகையை விதிக்கின்றார்.

👉பின்னர், அபராதத்தொகை கட்டுவதாக ஒப்புக்கொண்டு, போக்குவரத்து காவல் ஆய்வாளரிடம், நீதிபதி திரு.மகாஜன் சம்மதிக்கின்றார்.

👉 போக்குவரத்து காவல் ஆய்வாளர் அவர்கள், “உங்களது விதிமீறலுக்கான தொகையை, என்னிடம் கட்ட வேண்டாம்”.

🔅 “மாவட்டத் தலைமை நீதிமன்றத்திற்குச் சென்று, அங்கே உங்களுக்குரிய அபராதத் தொகையைக் கட்டுங்கள்” – என்று கூறி, ஒரு ரசீதைக் கொடுக்கின்றார்.

🔅 தான், ஒரு உச்சநீதிமன்ற நீதிபதி என்று காட்டிக்கொள்ளாமல், போக்குவரத்து காவல் ஆய்வாளர் சொன்னபடியே, நீதிபதி திரு.மகாஜன், மறுநாள் மாவட்ட நீதிமன்றத்தின் கூண்டின் மேல் ஏறி நின்றார்.

👉 “உன் பெயர் என்ன..? “- என்று அங்கிருந்த மாவட்ட தலைமை மாஜிஸ்ட்ரேட் கேட்க, “மகாஜன்”- என்கின்றார்.

🔅”என்ன வேலை செய்கிறாய்..?”- என்று மாவட்ட நீதிபதி கேட்க…

🔅 அதற்கு அவர் சற்றும் தயங்காமல், “சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக இருக்கின்றேன்.”- என்று தயங்காமல் சொல்கின்றார்.

🔅 உடனே அந்த மாவட்ட மாஜிஸ்திரேட், “மை லார்டு” எனக் கூறியபடியே பதறிப்போய், ஓடிவந்து திரு.மகாஜனை வணங்கினார்.

🔅அங்கிருந்த வழக்குரைஞர்கள், , மற்றும் காவலர்கள் என அனைவரும், ஒரு நொடியில் மிரண்டவாறு அதிர்ச்சியடைந்து, எழுந்து நின்றார்கள்.

🔅உச்சநீதிமன்ற நீதிபதி, “தயவு செய்து அனைவரும் உட்காருங்கள். உங்களது, பணியை ஒளிவு மறைவின்றி, தயங்காமல் சிறப்பாக செய்யுங்கள்.” என்றார் திரு.மகாஜன்.

🔅 மாவட்ட நீதிபதி அவர்கள் தனது தீர்ப்பாக….
*👉🏼 “முதன்முறையாக, மிகச்சிறிய தவறு செய்தவர்களை விடுதலை செய்யும் அதிகாரம் எனக்கு உண்டு. ஆதலால், அதனடிப்படையில், தங்களை விடுவிக்கிறேன்.” என்றார்.

🔅 திரு. மகாஜன் அவர்கள், இருகரம் கூப்பி, நன்றி தெரிவித்தவாறே வெளியில் வந்தார் மகாஜன்.

👉🏼 தனக்கான பதவியை பயன்படுத்தி, எவ்விடத்திலும் அதிகார துஷ்பிரயோகம் செய்யாமல், அனைத்து நிலைகளிலும் பொறுமையையும், தன்னுடைய பணிவையும் வெளிப்படுத்திய உச்ச நீதிமன்ற நீதிபதி உயர்திரு. மகாஜன் அவர்களை அங்கிருந்தோர் அனைவரும் மனதார பாராட்டி, வாழ்த்தினர்.

Leave a Reply

Your email address will not be published.