மதுரை, தேனி மாவட்டத்தில் நேற்று இரவு பலத்த இடி, மின்னலுடன் கனமழை

மதுரை, தேனி மாவட்டத்தில் நேற்று இரவு பலத்த இடி, மின்னலுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியதால் மக்கள் அவதிப்பட்டனர். மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று மாலை முதல் இரவு வரை பலத்த இடி, மின்னலுடன் பலத்த மழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக நகரின் முக்கியப் பகுதியான தல்லாகுளம், கோ.புதூர், மூன்றுமாவடி, கோரிப்பாளையம் மற்றும் ஒத்தக்கடை ஆகிய பகுதிகளில் இரவு 8 மணிக்கு தொடங்கிய மழை சுமார் 2 மணி நேரம் கொட்டித் தீர்த்தது. இதனால், சாலைகளில் வெள்ளம் ஓடியது. வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டனர். மதுரை புறநகர் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

Leave a Reply

Your email address will not be published.