கவரைப்பேட்டை ரயில் விபத்து

ஒன்றிய அரசு விழித்துக் கொள்ள இன்னும் எத்தனை குடும்பங்கள் அழியவேண்டும் என ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் அருகே கவரைப்பேட்டை ரயில் நிலையத்தில், சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி பயங்கர விபத்து நேரிட்டது. மைசூரில் இருந்து தர்பங்கா செல்லும் பாக்மதி அதிவிரைவு ரயில் (12578) கவரைப்பேட்டை ரயில் நிலையம் அருகே விபத்துக்குள்ளானது. 75 கி.மீ. வேகத்தில் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில், ஏற்கனவே லூப் லைனில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலின் பின்னால் மோதியது. பயணிகள் ரயிலின் எஞ்சினுக்கு பின்னால் இருந்த, பவர் பாக்ஸுடன் கூடிய சரக்குகள் வைக்கும் பெட்டியில் தீப்பிடித்தது.

Leave a Reply

Your email address will not be published.