காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 15,000 கனஅடி

இதேபோல், மேட்டூர் அணைக்கு நேற்று 8,268 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று 12,713 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 15,000 கனஅடி நீரும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு விநாடிக்கு 800 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவை விட, அணைக்கு வரும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் நீர்மட்டம் சரிந்து வருகிறது. நேற்று 92.84 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று 92.60 அடியாக குறைந்துள்ளது. நீர் இருப்பு 55.67 டிஎம்சியாக உள்ளது

Leave a Reply

Your email address will not be published.