காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 17 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் மற்றும் சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நேற்று 10,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று 17,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டு கிறது. இதன் காரணமாக, அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தர விட்டுள்ளது. வார விடுமுறையான இன்று ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள், அருவிகளில் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published.