பேருந்து உரிமையார்கள் அறிவிப்பு!

சுங்கச்சாவடி கட்டண உயர்வு எதிரொலி: ஆம்னி பேருந்து கட்டணத்தை உயர்த்துவதாக பேருந்து உரிமையார்கள் அறிவிப்பு!

 சுங்கச்சாவடிகளின் கட்டண உயர்வு காரணமாக ஆம்னி பேருந்து கட்டணம் உயர்த்தப்படுவதாக ஆம்னி பேருந்து உரிமையார்கள் அறிவித்துள்ளனர். நாட்டில் உள்ள சுங்கச்சாவடி கட்டணமானது ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை தேசிய நெடுஞ்சாலைத்துறையால் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அதன் படி ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதமும், செப்டம்பர் மாதமும் கட்டணம் உயர்த்தப்படுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் மொத்தம் உள்ள 67 சுங்கச் சாவடிகளில் இரண்டு தவனையாக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. நேற்றைய தினத்தை பொறுத்தவரை விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை, மதுரை, ஓமலூர், சமயபுரம் உட்ப 25 சுங்கச்சாவடிகளில் உயர்த்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.