சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட காங்கிரஸ் எம்பி திடீர் மரணம்
சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் எம்பி வசந்த்ராவ் சவான், இன்று திடீரென காலமானார். மகாராஷ்டிரா மாநில மூத்த காங்கிரஸ் தலைவரும், நாந்தேட் தொகுதி எம்பியுமான வசந்த்ராவ் சவான் (70), கடந்த சில நாட்களாக சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள கிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று மாலை முதல் அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்தது.