ராசி பலன்கள்

🌴மேஷம்🦜🕊️

ஆகஸ்ட் 14, 2024

எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உத்தியோகப் பணிகளில் சில மாற்றமான சூழல் ஏற்படும். சிந்தனைகளின் போக்கில் மாற்றம் உண்டாகும். கல்வி சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வமின்மை உண்டாகும். மற்றவர்கள் பற்றிய கருத்துகளை தவிர்க்கவும். வாகன பயணத்தில் மிதவேகம் நன்று. பத்திரம் தொடர்பான துறைகளில் விழிப்புணர்வு வேண்டும். சாந்தம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அஸ்வினி : மாற்றமான நாள்.
பரணி : ஆர்வமின்மை உண்டாகும்.

கிருத்திகை : விழிப்புணர்வு வேண்டும்.

🌴ரிஷபம்🦜🐄

ஆகஸ்ட் 14, 2024

நண்பர்களின் வழியில் அனுகூலம் உண்டாகும். மனதில் தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். உயர் கல்வி தொடர்பான விஷயங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். சிக்கலான செயல்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். கலகலப்பான பேச்சுக்களின் மூலம் பலரின் அறிமுகம் கிடைக்கும். தாமதம் மறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்

கிருத்திகை : அனுகூலம் உண்டாகும்.
ரோகிணி : கவனம் வேண்டும்.

மிருகசீரிஷம் : அறிமுகங்கள் கிடைக்கும்.

🌴மிதுனம்🦜🕊️

ஆகஸ்ட் 14, 2024

பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். வரவுக்கேற்ப செலவுகள் அமையும். தந்தை வழி சொத்துக்களால் ஆதாயம் ஏற்படும். பேச்சுக்களில் அனுபவம் வெளிப்படும். பணி நிமித்தமான பயணங்களால் ஆதாயம் ஏற்படும். கடன் தொடர்பான சிந்தனைகள் அவ்வப்போது ஏற்பட்டு மறையும். இன்ப சுற்றுலா செல்வது தொடர்பான வாய்ப்புகள் அமையும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மிருகசீரிஷம் : ஆர்வம் அதிகரிக்கும்.
திருவாதிரை : அனுபவம் வெளிப்படும்.

புனர்பூசம் : வாய்ப்புகள் அமையும்.

🌴கடகம்🦜🕊️

ஆகஸ்ட் 14, 2024

தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்றி கொள்வீர்கள். நீண்டநாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். சாமர்த்தியமான செயல்பாடுகளின் மூலம் சாதகமான சூழலை உருவாக்குவீர்கள். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். சுப காரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். புதிய முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். நட்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

புனர்பூசம் : பிரார்த்தனைகள் நிறைவேறும்.
பூசம் : ஆதாயம் உண்டாகும்.

ஆயில்யம் : சிந்தித்துச் செயல்படவும்.

🌴சிம்மம்🦜🕊️

ஆகஸ்ட் 14, 2024

குறுந்தொழில் தொடர்பான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உறவினர்களை பற்றிய புரிதல் உண்டாகும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் ஏற்படும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மூலம் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவீர்கள். கோபம் மறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மகம் : வெற்றி கிடைக்கும்.
பூரம் : மேன்மையான நாள்.

உத்திரம் : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.

🌴கன்னி🦜🕊️

ஆகஸ்ட் 14, 2024

உடன்பிறந்தவர்களிடம் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த பணிகள் நிறைவேறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். சிறு தூரப் பயணங்களின் மூலம் மாற்றங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கிய சிக்கல்கள் குறையும். வீட்டின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். இணைய விளையாட்டுகளில் கவனம் வேண்டும். அச்சம் மறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : கருநீல நிறம்

உத்திரம் : விட்டுக்கொடுத்துச் செயல்படவும்.
அஸ்தம் : முன்னேற்றமான நாள்.

சித்திரை : கவனம் வேண்டும்.

🌴துலாம்🦜🕊️

ஆகஸ்ட் 14, 2024

நிதானமான செயல்பாடுகளால் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். இறைப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். சமூகப் பணிகளில் சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மனதில் தோன்றும் எண்ணங்களை வெளிப்படுத்துவீர்கள். எதிர்பாராத சில வரவுகள் மூலம் கையிருப்புகள் அதிகரிக்கும். பெருமை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்

சித்திரை : முடிவுகள் கிடைக்கும்.
சுவாதி : வாய்ப்புகள் அமையும்.

விசாகம் : கையிருப்புகள் அதிகரிக்கும்.

🌴விருச்சிகம்🦜🕊️

ஆகஸ்ட் 14, 2024

குணநலன்களில் சில மாற்றங்கள் உண்டாகும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். எதிர்பாராத சில மாற்றங்கள் உண்டாகும். வியாபாரம் நிமித்தமான செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். வெளியூர் பணி நிமித்தமான சிந்தனைகள் மேம்படும். உணர்ச்சி வேகமின்றி பொறுமையுடன் செயல்படவும். கற்றல் பணிகளில் இருந்துவந்த குழப்பம் குறையும். சிரமம் விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

விசாகம் : மாற்றம் உண்டாகும்.
அனுஷம் : சிந்தித்துச் செயல்படவும்.

கேட்டை : குழப்பங்கள் குறையும்.

🌴தனுசு🦜🕊️

ஆகஸ்ட் 14, 2024

நண்பர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். விவசாய பணிகளில் சாதகமான சூழல் ஏற்படும். மனதில் இருக்கும் ரகசியங்களை பகிர்வதை தவிர்க்கவும். சமூகத்தில் பெரியோர்களின் அறிமுகம் உண்டாகும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகப் பணிகளில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். சோதனை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்பச்சை நிறம்

மூலம் : சாதகமான நாள்.
பூராடம் : அறிமுகங்கள் உண்டாகும்.

உத்திராடம் : சூழ்நிலையறிந்து செயல்படவும்.

🌴மகரம்🦜🕊️

ஆகஸ்ட் 14, 2024

உயர் அதிகாரிகள் மூலம் ஆதரவான சூழ்நிலை உண்டாகும். வியாபாரம் தொடர்பான கடன் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் பொறுப்புகள் மேம்படும். போட்டி பந்தயங்களில் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். தம்பதிகளுக்குள் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். எதிர்பாராத சிலரின் நட்பு மாற்றத்தை உண்டாக்கும். முயற்சி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஆகாயநீல நிறம்

உத்திராடம் : ஆதரவான நாள்.
திருவோணம் : திறமைகள் வெளிப்படும்.

அவிட்டம் : மாற்றம் பிறக்கும்.

🌴கும்பம்🦜🕊️

ஆகஸ்ட் 14, 2024

மருத்துவத் துறைகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். அரசு சார்ந்த நிலைப்பாடுகளை புரிந்து கொள்வீர்கள். கௌரவ பதவிகள் மூலம் செல்வாக்கு மேம்படும். உயர் அதிகாரிகள் மூலம் அலைச்சல் இருந்தாலும் அனுகூலம் ஏற்படும். அரசு தொடர்பான செயல்களில் விவேகத்துடன் நடந்து கொள்ளவும். அனுகூலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

அவிட்டம் : முன்னேற்றமான நாள்.
சதயம் : செல்வாக்குகள் மேம்படும்.

பூரட்டாதி : விவேகம் வேண்டும்.

🌴மீனம்🦜🕊️

ஆகஸ்ட் 14, 2024

தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் ஏற்படும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். உறவுகளிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். புகழ் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

பூரட்டாதி : கவனம் வேண்டும்.
உத்திரட்டாதி : அறிமுகம் ஏற்படும்.
ரேவதி : சிந்தித்துச் செயல்படவும்.

Leave a Reply

Your email address will not be published.