பங்குகள் விலை சரிவால் அதானி
ஹிண்டன்பர்க் அறிக்கை எதிரொலியால் அதானி குழும பங்குகள் விலை சரிந்து வர்த்தகமாகி வருகின்றன. பங்குகள் விலை சரிவால் அதானி குழுமத்தில் முதலீடு செய்தவர்களுக்கு ரூ.53,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. அதானி குழும நிறுவன பங்குகள் விலை 7 சதவீதம் வரை சரிந்தது. அதானி கிரீன் எனர்ஜி நிறுவன பங்குகள் விலை 7 சதவீதம் சரிந்து 5.1,656-5 வர்த்தகமாகிறது. அதானி டோட்டல் கேஸ் நிறுவன பங்குகள் விலை 5 சதவீதமும் அதானி பவர் பங்கு விலை 4 சதவீதம் சரிந்து வர்த்தகமாகி வருகிறது. அதானி வில்மர், அதானி எனர்ஜி சொல்யூசன், அதானி என்டர்பிரைசஸ் பங்குகள் விலை 3 சதவீதம் வரை சரிந்துள்ளது