புழல் ஏரிக்கு நீர்வரத்து
புழல் ஏரிக்கு நீர்வரத்து 108 கனஅடியாக உள்ளது. 3300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட ஏரியில் நீர்இருப்பு 2483 மில்லியன் கனஅடியாக உள்ளது. சென்னை குடிநீருக்காக 184 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. 1081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 95 மில்லியன் கனஅடியாக உள்ளது. புழல் ஏரிக்கு வினாடிக்கு 10 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. 500 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 311 மில்லியன் கனஅடியாக உள்ளது.
நீர்வரத்து 40 கன அடியாக அதிகரித்துள்ளது. பூண்டி ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 140 கனஅடியில் இருந்து 280 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு வினாடிக்கு 80 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. 3231 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் நீர்இருப்பு 104 மில்லியன் கன அடியாக உள்ளது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் 37.94% நீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் – 40.27%, புழல் – 75.24%, பூண்டி – 3.22%, சோழவரம் – 8.79%, கண்ணன்கோட்டை – 62.2% நீர் இருப்பு உள்ளது.