திருச்சி அருகே உப்பாற்றில் வெள்ளத்தால் தற்காலிக பாலம் உடைந்தது:
திருச்சி அருகே உப்பாற்றில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் தற்காலிக பாலம் உடைந்தது. போக்குவரத்து துண்டிப்பால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். திருச்சி மாவட்டம் லால்குடி அருகே நகர் கிராமம் மற்றும் நெய்குப்பை தர்மநாதபுரம் ஆகிய கிராமங்களை இணைக்கும் வகையில் உப்பாற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைக்கப்பட்டது. இந்த வழியாக தர்மநாதபுரம், மகிழம்பாடி, புரத்தாக்குடி, ஆர்.வளவனூர் ஆகிய கிராம மக்கள் சென்று வருகின்றனர். இந்நிலையில், இந்த தரைப்பாலத்தில் ஆங்காங்கே ஓட்டை ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் நாள்தோறும் அச்சத்துடன் சென்று வந்தனர்.
