Koo-வை தொடர்ந்து சௌந்தர்யா ரஜினிகாந்தின் Hoote செயலியும் மூடல்!
Koo-வை தொடர்ந்து சௌந்தர்யா ரஜினிகாந்தின் Hoote செயலியும் மூடல்!
போதிய வரவேற்பு இல்லாத காரணத்தால் சமீபத்தில் மூடப்பட்ட Koo செயலியை தொடர்ந்து சௌந்தர்யா ரஜினிகாந்தின் Hoote செயலியும் தனது செயல்பாட்டை நிறுத்தியது
மேலும், WhatsApp-க்கு மாற்றாக Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தொடங்கிய Arattai செயலியும் வெறும் 100,000 பதிவிறக்கங்கள் மட்டுமே பெற்று மக்களின் வரவேற்பை பெற தவறியுள்ளது
Koo, Hoote, Arattai ஆகிய 3 இந்திய செயலிகளும் கொரோனா ஊரடங்குக்கு மத்தியில், Facebook, Twitter போன்ற நிறுவனங்கள் மத்திய அரசின் கட்டுப்பாடுகளை எதிர்கொண்ட போது தொடங்கப்பட்டவை
ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த செயலிகளுக்கு மாற்றாக எந்த புதுமையான யோசனைகள், உக்திகள் இல்லாமல் அறிமுகமானதால் தான், இந்த 3 செயலிகளும் குறுகிய காலத்திலேயே தங்களின் பயனர்களின் ஆர்வத்தை இழந்ததாக விமர்சிக்கப்படுகிறது