மக்களுக்கு அயராது உழைக்க வேண்டும் தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்?

திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அயராது உழைக்க வேண்டும் என்று தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ளன. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் “அதிமுகவை நிராகரிப்போம்” என்ற தலைப்பில் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் சொன்னதை செய்வோம் செய்வதைச் சொல்வோம் என திமுக தொண்டர்களுக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஆட்சியில் இல்லாதபோதும் மக்களுக்கு எப்போதும் துணையாக இருக்கும் கட்சி திமுக தான்.

திமுக ஆட்சி அமைந்ததும் மக்களின் கோரிக்கைகள் மீது 100 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். ஆட்சிக்கு வந்து நூறு நாட்களில் குறைகளை தீர்க்க வேண்டும் என்றால், அதற்கு முந்தைய 100 நாட்களும் அயராது உழைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்

Leave a Reply

Your email address will not be published.