நாடாளுமன்றதிற்குள் நுழைந்த மர்ம நபர்களால்
மீண்டும் நாடாளுமன்றதிற்குள் நுழைந்த மர்ம நபர்களால் சர்ச்சை.. போலி ஆதார் கார்டுகளை காண்பித்து நுழைய முயன்ற 3 பேர் கைது
நாடாளுமன்றத்திற்குள் போலி ஆதார் கார்டுகளை காண்பித்து நுழைய முயன்ற 3 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் கடந்த ஜூன் மாதம் 4ம் தேதி செவ்வாய்கிழமை அன்று நாடாளுமன்றத்தில் உள்ள 3ம் நுழைவு வாயில் முன்பு ஏராளமானவர்கள் உள்ளே செல்வதற்காக காத்து கொண்டிருந்தபோது நிகழ்ந்துள்ளது. அப்போது 3 பேர் தங்களுடைய ஆதார் கார்டுகளை காண்பித்து உள்ளே செல்ல முயற்சித்துள்ளனர். சி.ஐ.எஸ்.எப் வீரர்கள் யார் உள்ளே செல்ல போகிறார்களோ அவர்களை பரிசோதித்த பின்னர் அனுமதிப்பார்கள்.
அப்படி மூவரையும் பரிசோதிக்கும் போது ஆதார் கார்டுகளை காண்பித்துள்ளனர். அத்தகைய ஆதார் கார்டுகளை காண்பித்ததில் சி.ஐ.எஸ்.எப் வீரர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அவர்களை தனியாக அழைத்து சென்று விசாரணை செய்த போது ஆதார் கார்டுகள் போலியாக தயாரிக்கப்பட்டது தெரியவந்தது. அவர்களிடம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர்களின் பெயர் காசீம், மோனிஸ், சோயப் என்பது தெரியவந்தது. புதிய நாடாளுமன்றத்தில் தற்போது சில கட்டுமானங்கள் நடைபெற்று வருகிறது.