உலக பாவை – தொடர் – 22
22. அன்புறவே
அனைத்துறவு
வென்னீரைப் பாய்ச்சின் எந்த விளைச்சலும்கை கூட லில்லை; வன்முறையால் உலகம் என்றும் வாழ்ந்துவிடப் போவ தில்லை;
வன்முறையால் இடையில் நன்மை
வாய்க்குமெனில் நிலைப்ப தில்லை ;
வன்முறையால் கிடைக்கும் நன்மை
வழிமுறைக்கும் தீராத் தொல்லை;
அன்புறவால் தீமை கூட அடுத்தவரைத் தொடுதல் இல்லை ;
அன்புறவால் தோன்றும் நன்மை அண்டமெலாம் கடந்த எல்லை;
அன்புறவாம் அதனின் தன்மை அவனியெலாம் அறியச் செய்து வன்முறையர் மனதை மாற்றி வலம்வருவாய் உலகப் பாவாய்!
பேராசிரியர் முனைவர்
கு. மோகனராசு
நிறுவனர்
உலகத் திருக்குறள் மையம்
திருக்குறள்: உலகத் திருக்குறள் மையம், சென்னை