மீட்கச் சென்றவர்களும் பள்ளத்தில் விழுந்ததால் பரபரப்பு

தரைப்பாலத்தை கடக்க முயன்றவர் வெள்ளத்தில் சிக்கி தவிப்பு:

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே தரைப்பாலத்தை கடக்க முயன்றவர் வெள்ளத்தில் சிக்கிய நிலையில் அவரை மீட்க சென்றவர்களும் பள்ளத்தில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கனமழையால் அனைத்துபதி என்ற பகுதியில் 2 குட்டைகள் முழுவதுமாக நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கோபிசெட்டிபாளையம் திருப்பூர் நெடுஞ்சாலையில் உள்ள தரைப்பாலத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்நிலையில் அந்த வழியாக வாகனத்தில் சென்ற ஒருவர் தண்ணீரின் வேகத்தால் கீழே விழுந்தார்.

அப்போது அங்கிருந்த 3 பேர் அவரை மீட்க சென்ற போது தடுமாறி அவர்களும் பள்ளத்தில் விழுந்தனர். பின்னர் சுதாரித்து கொண்ட நால்வரும் வெள்ளத்திலிருந்து மீண்டு வந்தனர். வாகனமும் பத்திரமாக மீட்கப்பட்டது. மதுரையில் பாலம் கட்டுவதற்காக தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் பாய்ந்து ஆட்டோ ஒன்று விபத்துக்குள்ளானது. கோரிப்பாளையம் செல்லூர் சாலையில் பால வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ஷேர் ஆட்டோ ஒன்று குளம் போல தேங்கியிருந்த 6 அடி பள்ளத்தில் தவறி விழுந்தது. ஆட்டோவிலிருந்த 4 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதே போல் ஆரப்பாளையத்தில் கார் ஒன்று தேங்கி நின்ற மழைநீரில் சாலை தெரியாமல் தடுப்பு சுவரில் மோதி தலைகுப்புற கவிழ்ந்தது.

Leave a Reply

Your email address will not be published.