இளம்பெண்ணை கத்தியால் தாக்கிய
இளம்பெண்ணை கத்தியால் தாக்கிய வாலிபர் போலீசுக்கு பயந்து தற்கொலை முயற்சி
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இளம்பெண்ணை ஓட ஓட விரட்டி கத்தியால் தாக்கிய வாலிபர் ஆண்டனி, போலீசுக்கு பயந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். காயமடைந்த பெண் மற்றும் ஆண்டனி ஆகிய இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 2 குழந்தைக்கு தாயான பெண்ணை இன்ஸ்டாகிராம் மூலம் ஆண்டனி காதலித்ததாகவும், தற்போது அப்பெண் பேச மறுத்ததால் கத்தியால் குத்தியதாக போலீஸ் விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.