இந்தாண்டு குடிநீர் தட்டுப்பாடு வராது
நீர் நிரம்பி காணப்படும் சிட்ரபாக்கம் தடுப்பணை:
ஊத்துக்கோட்டை சிட்ரபாக்கம் தடுப்பணையில் தண்ணீர் நிரம்பி காணப்படுவதால் அப்பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது. இதனால் அப்பகுதி மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஊத்துக்கோட்டை அருகே ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் கிராமத்தில் மிகப்பெரிய ஏரி உள்ளது. மழைக்காலங்களில் ஏரி நிரம்பி தண்ணீர் திறக்கப்பட்டால், இந்த தண்ணீர் நாகலாபுரம், சுருட்டபள்ளி, ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், ஆரணி, பொன்னேரி வழியாக சென்று பழவேற்காடு கடலில் கலக்கும். இவ்வாறு வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை சேமித்து வைக்க ஊத்துக்கோட்டை பேரூராட்சி பகுதியில் உள்ள சிட்ரபாக்கத்தில் ஆரணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் எனவும், மேலும் ஊத்துக்கோட்டை சுற்றியுள்ள பகுதிகளான சிட்ரபாக்கம், அனந்தேரி, போந்தவாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் நெல், கரும்பு, பூ செடிகள் என பல பயிர்கள் வைத்துள்ளனர்.