உலகப் பாவை – தொடர் – 20

 20. யாரும் அடிமை இல்லை

யாருக்கும் யாரும் இங்கே அடிமையே இல்லை என்று பாருக்குள் வாழ்வோர் நெஞ்சில் பதிந்திடவே வேண்டும் நன்று;

பேருக்கு மனித ராகிப்

பிறர்க்கடிமை ஆனோர் எல்லாம் வீறுற்று  விலங்கொ டித்து மேதினியில் உரிமைக் காற்றை

நேருக்கு நேராய் நின்று நுகர்ந்திட்டால், ஒருமைப் பாட்டின்

வேருக்கு நீராய் அன்னார் விளங்குவது திண்ணம்; மண்ணில்

வீறுற்றான் கடைசி மாந்தன் விலங்கொடித்தான் என்ற சேதி ஊருலகில் ஒலிக்க வேண்டி உலாவருவாய் உலகப் பாவாய்!

பேராசிரியர் முனைவர் கு.மோகனராசு

நிறுவனர்

உலகத் திருக்குறள் மையம்

Leave a Reply

Your email address will not be published.