அகிலேஷ் யாதவ் கன்னூஜ்

உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும் சமாஜ்வாடி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் கன்னூஜ் மக்களவைத் தொகுதியில் வேட்பாளராக களம் இறங்கியுள்ளார். இந்த தொகுதியில் வரும் 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், அவர் பிரசாரத்தைத் தொடங்குவதற்கு முன்பாக, கடந்த மே 6ஆம் தேதி, சித்தபீத் பாபா கௌரி சங்கர் மகாதேவ் மந்திருக்குச் சென்று பிரார்த்தனை செய்தார். அகிலேஷ் யாதவ், கோயிலில் வழிபட்டுவிட்டுச் சென்றதும், கோயில் வளாகத்தை கங்கை நீரைக் கொண்டு பாஜகவினர் சுத்தம் செய்தது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பாஜகவினர், “அகிலேஷ் யாதவுடன், முஸ்லிம் தலைவர்களும் கோயிலுக்கு வந்தனர். தவிர, அவர்கள் காலில் செருப்பு அணிந்திருந்தனர். அதன்காரணமாக நாங்கள் கங்கை நீரைக் கொண்டு சுத்தம் செய்தோம்” எனத் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.