பல விமானங்கள் ரத்து
ஐக்கிய அரபு எமிரேட்டில் மீண்டும் கனமழை கொட்டி தீர்த்தது: பல விமானங்கள் ரத்து
ஐக்கிய அரபு எமிரேட்டில் நேற்று மீண்டும் கனமழை பெய்ததால் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. பாலைவன நகரமான துபாயில் கடந்த மாதம் 14 ம் தேதி கன மழை கொட்டி தீர்த்தது. 75 ஆண்டுகளில் இல்லாத வகையில் பலத்த மழை பெய்தது. ஒரு ஆண்டில் பெய்யக்கூடிய மழை ஒரே நாளில் பெய்ததால் துபாயில் உள்ள விமான நிலையம் உள்ளிட்ட நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது.
இதனால் அங்கு இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. ஓமனிலும் மழை பெய்ததில் 18 பேர் பலியாயினர். இந்த மழை பெய்து 2 வாரங்கள் ஆன நிலையில் துபாயில் நேற்று மீண்டும் மழை பெய்தது. மழையுடன் பலத்த காற்றும் வீசியது. இதன் காரணமாக விமான சேவை, நகரின் மெட்ரோ சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
https://googleads.g.doubleclick.net/pagead/ads?gdpr=0&client=ca-pub-1112317142011070&output=html&h=280&adk=2295564852&adf=170550646&w=780&abgtt=6&fwrn=4&fwrnh=100&lmt=1714680044&num_ads=1&rafmt=1&armr=3&sem=mc&pwprc=8953348062&ad_type=text_image&format=780×280&url=https%3A%2F%2Fwww.dinakaran.com%2Fheavy_rain_hits_uae_many_flights_cancelled%2F&fwr=0&pra=3&rh=195&rw=779&rpe=1&resp_fmts=3&wgl=1&fa=27&uach=WyJXaW5kb3dzIiwiMC4xLjAiLCJ4ODYiLCIiLCIxMDkuMC41NDE0LjEyMCIsbnVsbCwwLG51bGwsIjMyIixbWyJOb3RfQSBCcmFuZCIsIjk5LjAuMC4wIl0sWyJHb29nbGUgQ2hyb21lIiwiMTA5LjAuNTQxNC4xMjAiXSxbIkNocm9taXVtIiwiMTA5LjAuNTQxNC4xMjAiXV0sMF0.&dt=1714713541141&bpp=2&bdt=3561&idt=2&shv=r20240501&mjsv=m202405020101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3Daddaaaaa9345a0b4%3AT%3D1713005383%3ART%3D1714713358%3AS%3DALNI_MZ-k3U99gLRAHmmmYlpQfLEBPY3cA&gpic=UID%3D00000deb3b1c1c72%3AT%3D1713005383%3ART%3D1714713358%3AS%3DALNI_Maw1aXNHLNs9wiz3IadhGDR2m4HVw&eo_id_str=ID%3D1ff95dba9409cbfd%3AT%3D1713005383%3ART%3D1714713358%3AS%3DAA-AfjbOzJPUGw-u8BL6EcRgKM0V&prev_fmts=0x0%2C300x600%2C1200x280&nras=3&correlator=5679998061051&frm=20&pv=1&ga_vid=1474980703.1713005383&ga_sid=1714713540&ga_hid=686570273&ga_fc=1&u_tz=330&u_his=5&u_h=720&u_w=1280&u_ah=690&u_aw=1280&u_cd=24&u_sd=1&dmc=4&adx=47&ady=1495&biw=1280&bih=562&scr_x=0&scr_y=0&eid=44759875%2C44759926%2C44759842%2C95329717%2C95331695%2C95331983%2C31083324%2C95331042&oid=2&psts=AOrYGskjtOKnc0WX6ZifiPLW-vMV2OQOkl1unTrMK8BrAuukrC-rdGtz5USLo_c3ZX3hI38ggRdcq7PGtRmz2u4lKkgBUw&pvsid=2959708543846532&tmod=764879383&uas=3&nvt=1&ref=https%3A%2F%2Fwww.dinakaran.com%2Fcategory%2Fnews%2Fworld_news%2F&fc=1408&brdim=0%2C0%2C0%2C0%2C1280%2C0%2C1280%2C690%2C1280%2C562&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&fu=128&bc=31&bz=1&psd=W251bGwsbnVsbCxudWxsLDNd&ifi=7&uci=a!7&btvi=2&fsb=1&dtd=561மோசமான வானிலை காரணமாக துபாயில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு புறப்படும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் பல விமானங்கள் புறப்படும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக எமிரேட் ஏர்லைன்ஸ் நிறுனம் அறிவித்துள்ளது. இதனால் இன்று(நேற்று) துபாய்க்கு வரும் பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படலாம் என தெரிகிறது.