கிணற்றில் இருந்து 4 அடி நீரால் உயிர் பிழைப்பு
120 அடி ஆழ கிணற்றில் விழுந்த 14 வயது சிறுவன்… கிணற்றில் இருந்து 4 அடி நீரால் உயிர் பிழைப்பு…
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே, 120 அடி ஆழ கிணற்றில் விழுந்த 14 வயது சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டார்.
கேத்திரெட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுவன் பவித்ரன். இவர், அதிகாலையில் தனது விவசாய திட்டத்திற்கு சென்றபோது, 120 அடி ஆழம் கொண்ட விவசாய கிணற்றில் தவறி விழுந்தார். கிணற்றில் 4 அடி ஆழத்திற்கு தண்ணீர் இருந்ததால், அவர் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தார். அவரை கயிறு கட்டி மீட்ட தீயணைப்புத்துறையினர், ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.