மீசை முருகேஷ் அவரின் 90 வது ஜனன தினம்

இந்தியத் திரைத்துறையில் மறக்க முடியாத பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் மறைந்த நடிகர்,
மீசை முருகேஷ் அவர்கள்.இன்று அவரின் 90 வது ஜனன தினம் .
1930.13.01 அன்று கோயம்புத்தூர் மாவட்டம் இடிகரை என்ற கிராமத்தில் சுப்ரமணியம் முதலியார்,பொன்னம்மாள்
இணையருக்கு மகனாக பிறந்தார்.
சிறு வயதிலிருந்தே கலைபால் நாட்டம் கொண்டவர் முருகேஷ்.இவர் மனைவி பெயர் கண்ணம்மா. எம்.கே.தியாகராஜா பாகவதர்,கே.பி.சுந்தராம்பாள்,சீர்காழி கோவிந்தராஜன் போன்ற இசை மேதைகளுடன் இவரும் இசைத்துறையில் அறிமுகமானார். சுமார்
25 இதற்கும் மேற்பட்ட இசைக்கருவிகளை வாசிக்கக்கூடியவர்.
எம்.எஸ்.விஸ்வநாதன் ,குன்னக்குடி வைத்தியநாதன்,
சங்கர் _கணேஷ்,இளையராஜா போன்ற இசையமைப்பாளர்களிடம் பணியாற்றியவர்.
பாடல் பதிவுகளின் போது,இசையமைப்பாளர்களினால் செய்ய முடியாத ஒலி அமைப்புகளை திறம்பட செய்யக்கூடியவர் முருகேஷ்.
“அன்பே வா”படத்தில் இடம்பெற்ற “ராஜாவின் பார்வை “பாடல் பதிவில் குதிரைகளின் குழம்பொலி,”படகோட்டி”படத்தில் இடம்பெற்ற ஒரு சில பாடல்களில் வரும்
காற்றின் ஒலி,”பாலும் பழமும்”படத்தில் இடம்பெற்ற “போனால் போகட்டும் போடா”பாடலில் வரும் ஓநாய்,நரி. பறவைகளின் ஒலி,படங்களில் வரும் நெருப்பெரிவதற்கேற்ற சப்தம்,ப்ளாஸ்டிக் குடுவைகளைப் பயன்படுத்தி பட்டாசு ஒலி,,மணல் கடதாசியை உரசி ரயில் வரும் ஒலி,தகரங்களைக் கொண்டு புயல் ஒலி,கொட்டாங்கச்சியைக் (சிரட்டை)கொண்டு குதிரைகளின் குழம்பொலி போன்ற ஒலியமைப்புகளை இவரே அதற்கென வித்யாசமான வாத்திய கருவிகளை கண்டுபிடித்து தத்ரூபமாக
அமைத்து இசைக்கு தன் பங்களிப்பை நல்கிய ஓர் திறமையுள்ள கலைஞர். இவர் நடித்த சில முக்கிய படங்கள்:
சுகமான ராகங்கள்,ஆண்பாவம்,
அமைதிப்படை,ஜனனி,பூவே உனக்காக,
உன்னால் முடியும் தம்பி,சின்னத்தம்பி பெரியத்தம்பி,உயிரே உனக்காக உட்பட சுமார் நூற்றுக்கும் அதிகமான படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.
திரைத்துறையில் பல விருதுகளை பெற்றவர். இலங்கை கொழும்பில் சுகததாச அரங்கில் 1990 இல் நடைபெற்ற ஓர் மாபெரும் இசை நிகழ்ச்சியில் தனது இசைத்தொகுப்பினை வழங்கி அமோக பாராட்டுப் பெற்றவர் திரு.மீசை முருகேஷ் அவர்கள்.இவரின் பங்களிப்பு தமிழ், ஹிந்தி,தெலுங்கு,கன்னடம். மலையாளம் உட்பட பல இந்திய மொழிகள் பலவற்றிலும் கலந்துள்ளது சிறப்புக்குரியது.கலையுலகில் மறக்க முடியாத ஓர் பன்முகத்துறை கொண்ட கலைஞர் திரு. மீசை முருகேஷ் அவர்கள்.2014.நவம்பர் 08 அன்று சென்னை வடபழனியில் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.இக் கலைஞர் இலங்கை வந்தபோது அவருடன் இணைந்து நான் எடுத்த படத்தை இப்பதிவில் காணலாம்.

செய்தியாளர் விக்னேஸ்வரன்

Leave a Reply

Your email address will not be published.