திருடுபோனதாக புகார்
நடிகர் மன்சூர் அலிகான் கட்சி அலுவலகத்தில் பொருட்கள் திருடுபோனதாக புகார்
நடிகர் மன்சூர் அலிகான் கட்சி அலுவலகத்தில் இருந்த லெட்டர் பேட், ரப்பர் ஸ்டாம்ப், மடிக்கணினி திருடுபோனதாக புகார் எழுந்துள்ளது. இந்திய ஜனநாயக புலிகள் என்ற கட்சியை நடத்தி வருகிறார் நடிகர் மன்சூர் அலிகான். அலுவலக பொருட்களை கட்சியின் பொதுச்செயலாளர் கண்ணதாசன் திருடிவிட்டதாக மன்சூர் அலிகான் புகார் கொடுத்துள்ளார்