முன்னாள் வீரர்கள் காட்டம்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் விராட் கோஹ்லி. அண்மையில் சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் ஆடவில்லை. கோஹ்லி-அனுஷ்கா சர்மா தம்பதியினருக்கு 2வதாக ஆண் குழந்தை பிறந்ததால் அவர் ஓய்வு எடுத்துக்கொண்டார். வரும் 22ம் தேதி தொடங்கும் ஐபிஎல் கோஹ்லி களம் இறங்குகிறார். விரைவில் அவர் அணிஆர்சிபி அணியில் இணைவார் என தெரிகிறது. இதனிடையே வரும் ஜூன் மாதம் வெஸ்ட்இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ள ஐசிசி டி.20 உலக கோப்பை தொடரில் விராட் கோஹ்லிக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காது என தகவல் வெளியாகி இருக்கிறது.